கப்பல் விபத்தில் காணாமல் போன, மாணவியின் எலும்புகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

தென் கொரியாவில் கப்பல் விபத்தில் காணாமல் போன, மாணவியின் எலும்புகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுலா சென்ற கப்பல், கடந்த 2014 ஆம் ஆண்டு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பேரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தன. தேடுதல் பணிகளை அந்நாட்டு அரசு அண்மையில் தீவிரப்படுத்திய நிலையில், விபத்துக்குள்ளான படகின் பாகங்களிலிருந்து மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்ததில், உயிரிழந்த 17 வயது பள்ளி மாணவியின் எலும்புகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!