கன்னியாகுமரி நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன உரிமையாளர் சரண்

கன்னியாகுமரியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படும் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் உரிமையாளர் நிர்மலன், மதுரை முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கேரள-தமிழக எல்லையில் உள்ள மத்தம்பாலை பகுதியைச் சேர்ந்த நிர்மலன், அதே பகுதியில் நிர்மல் கிருஷ்ணா சிட் ஃபண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். முதிர்வு காலம் முடிவடைந்து பல நாட்களாகியும் முதலீட்டாளர்களுக்கு நிர்மல் கிருஷ்ணா நிதிநிறுவனம், பணத்தை தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. நிறுவனத்தின் உரிமையாளரான நிர்மலன் தலைமறைவான நிலையில், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7 கிலோ தங்கமும், ஒரு கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. நிர்மலனை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் பலகட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நிர்மலன் சரணடைந்தார். அவரை நவம்பர் 29ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலனை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன