கன்னியாகுமரி: ஆண்கள் மது அருந்துவதால் பெண்கள் பாதிக்கப்படுவதாக சித்தரித்து போராட்டம்

கன்னியாகுமரி அருகே மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுபாட்டில்களை உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்புறம் அருகே நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வந்த மதுபானக் கடையை திக்குறிச்சி பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பாழடைந்த கட்டடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை எனக்கூறி, அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆண்கள் மது அருந்துவது போலவும், பெண்கள் அதனால் பாதிக்கப்படுவது போலவும் சித்தரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. இறுதியில் அந்த மதுபாட்டில்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன