கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடந்ததால், நாகர்கோவில் – திருவனந்தபுரம் பயணிகள் ரயில் இரண்டுமணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

ஞசாறான்விளை பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அதே பகுதியை சேர்ந்த வினு என்ற இளைஞர் தலை துண்டித்த நிலையில் சடலமாக கிடந்தார்.

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, அந்த உடல் சிதைந்து விடாமல் இருக்க, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயில் சற்று தூரத்திற்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், வினுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் 2மணி தாமதத்திற்குப் பின் நாகர்கோவில் பயணிகள் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன