கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 4 பெண்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள தர்காவிற்கு வழிபட காரில் சென்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு கிராமத்தில் சென்றபோது, காரின் டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜூனத், குணசுந்திரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன