கனமழை, வெள்ளத்தால் அசாமில் கடும் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்த ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் பெய்துவரும் மழையால் பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகான் ((Nagaon)) மாவட்டத்தில் கலியாபர் ((Kaliabor)) என்ற இடத்தில் இருந்த ஆற்றுப்பாலம், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

இதுவரை 14 பேர் பலியான நிலையில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கியுள்ளனர். மீட்பு பணிகளில் விமானப் படையும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஈடுபட்டுள்ளன. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதாக கூறியுள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மீட்பு பணிகளை துரிதப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு மத்திய அரசை கோரியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன