கனமழையால் தரைப்பாலம் சேதம் – போக்குவரத்து பாதிப்பு என பொதுமக்கள் புகார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. சோலவயல் பகுதியில் உள்ள வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்றதால் அங்கிருந்த தரைப்பாலத்தின் ஒருமுனை இடிந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!