கனடா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீயின் காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் Kamloops நகரின் அருகே வில்லியம் லேக் வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் தீயில் கருகி வருகின்றன. நெருப்பால் எரியும் புகைமூட்டம் சுற்றுப்பகுதியில் பரவி வருகிறது. தீயை அணைக்க ஹெலிகாப்டர்களில் ரசாயனப்பொடி தூவப்பட்டு வருகிறது. இதனிடையே, புகைமூட்டத்தால் சுற்றுப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவும், தீ பரவி வருவதன் காரணமாகவும் Kamloops நகரில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!