கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட கட்சி பிரமுகர்

புதுச்சேரி என்.ஆர் காங்., பிரமுகர் தயாளனை தற்கொலைக்கு தூண்டியதாக, தலைமறைவான தம்பதியை போலீஸார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி தர்மாபுரி வழுதாவூர் சாலையை சேர்ந்த என்.ஆர்.காங்., பிரமுகரான தயாளன் கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட செலவிற்காக இளங்கோ என்பவரிடம் கந்து வட்டிக்கு பல லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

தேர்தலில் தோற்றதாலும் வருமானம் இல்லாததாலும் கடனை செலுத்தமுடியாத சூழலில் நெருக்கடி கொடுத்த இளங்கோவும் அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தயாளன் தற்கொலை செய்து கொண்டார்.இதனையடுத்து இளங்கோ மற்றும் அவரது மனைவி மீது, தற்கொலைக்கு தூண்டுதல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான தம்பதியை தேடிவருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன