கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 7 பேருக்கு உற்சாக வரவேற்பு

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 7 பேருக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்றக்கோரி கடந்த ஜுன் மாதம் நடந்த போராட்டத்தில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, கதிராமங்கலத்தை சேர்ந்த 7 பேர் சனிக்கிழமை சொந்த ஊர் திரும்பினர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்திய கதிராமங்கலம் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன