Advertisement

கதிராமங்கலம் போராட்டக்களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ஸ்டாலின்

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி, கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சென்று ஆதரவு தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடையே உரையாற்றினார்.

மீத்தேன் எடுக்க திமுக அனுமதி தந்ததாக ஆளுங்கட்சி பொய் பிரச்சாரம் செய்துவருவதாக கூறிய அவர், திமுக கொண்டுவந்த திட்டங்களை ரத்து செய்யும் அதிமுக அரசு, மீத்தேன் திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவற்றுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போதுள்ள அதிமுக அரசு ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையே ஆதரித்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

One Response to கதிராமங்கலம் போராட்டக்களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ஸ்டாலின்

  1. பா.பாலாம்பிகைநாதன் சொல்கிறார்:

    MBBS சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வினியோகித்த மருத்துவக்கல்வி இயக்குனரகம் நீட் அடிப்படையிலேயேசேர்க்கை எனஅறிவித்திருந்தது.இதனால் நீட் தேர்வு எழுதாத ஆனால் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. ஆனால் தற்போது அரசு முயற்சி செய்துவரும் மதிப்பெண் அடிப்படையிலான முறையில் சேர்க்கை நடைபெற்றால் அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும். எனவே மருத்துவக் கல்வி இயக்குனரகம் நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை விண்ணப்பங்களை குறைந்த கால அவகாசத்துடனாவதுவினியோகிக்க வேண்டும். அரசியல் தலைவர்களும் பத்திரிக்கை சகோதரர்களும் தயவுசெய்து இதற்காக குரல் கொடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன