கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜாமீனில் விடுதலை

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் , ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 9 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை கதிராமங்கலம் கிராமத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன