கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கும் அமைப்பு

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தடுத்து தாக்கி அழிக்கும் அமைப்பை அமெரிக்கா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை 2 முறை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும்வகையிலும், தனது பலத்தை நிரூபிக்கவும், பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. அதன்படி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அழிக்கும் அமைப்பின் சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

அமெரிக்க விமானப் படை தளத்தில் இருந்து பசிபிக் பெருங்கடலின் மீது ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. இந்த ஏவுகணையை அலாஸ்காவில் பொருத்தப்பட்டிருந்த ‘தாட்’ தடுப்பு ஏவுகணை இடைமறித்து அழித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன