கட்டாய தேர்ச்சி முறையை நீக்க முடிவு செய்துள்ளது குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து நடவடிக்கை – செங்கோட்டையன்

8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவிப்பு குறித்து மத்திய மனிதவள துறையில் இருந்து தகவல் வரவில்லை என்றும், முறையான அறிவிப்புக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன