Advertisement

கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு

ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமையகத்திற்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு, டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல், கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாக நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன