கடும் முயற்சிக்குப் பிறகு கூண்டுக்குள் சிக்கிய ரத்த ருசி கண்ட சிறுத்தை

ஒடிசாவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் வைத்து பிடித்தனர். நாவ்பாடா என்ற ஊருக்குள் புகுந்துவிட்ட அந்த சிறுத்தை அங்கிருந்த கால்நடைகளை கடித்து குதறியதுடன் மனிதர்களையும் தாக்கியது. இதில் கிராமவாசிகள் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிறுத்தையை வனத்துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின்னர் கூண்டு வைத்துப் பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை நந்தன்கன்னன் என்னுமிடத்திற்கு கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன