கடலூர்:வெள்ளிக்கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமம்!

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்பகுதியில் எண்ணெய் படிமம் கலந்துள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மாதம் 28ம் தேதி சென்னை என்னூர் துறைமுகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிகொண்ட விபத்தில் 45 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமம் காணப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ், அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளிக்கடற்கரை பகுதியில் எண்ணெய் படலங்கள் அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கும் என்று தெரிவித்தார். இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன