கடற்கரை சாலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் – தமிழ் திரையுலகினர் வலியுறுத்தல்

சென்னை கடற்கரை சாலையில் சிவாஜி சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். சென்னை வடபழனியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டது தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என அவர்கள் குற்றம்சாட்டினர். கடற்கரை சாலையில் ஏதேனும் ஒரு இடத்தில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன