கடன் தொல்லையால் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

கடலூரில் கடன் தொல்லையால் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோதண்டராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த சாய்பாபு என்ற பெண் கணவனை இழந்த நிலையில், கோகுலன், கோஷன் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வந்தார். குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கியதால் திம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சாய்பாபு குழந்தைகளுடன் சென்றார். ஆனால் அங்கும் கடன் கொடுத்தவர்கள் வரத் தொடங்கியதால் மனம் உடைந்த சாய்பாபு தமது இருமகன்களையும் அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு பின்னர் தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட சாய்பாபு மட்டும் பிழைத்துக் கொண்டார். அவரை கைது செய்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!