கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்காக சட்டபூர்வமானதாக்கலாம் – மேனகா காந்தி

கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்காக சட்டபூர்வமானதாக்கலாம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய மருந்துத் தேவை குறைப்புக் கொள்கை தொடர்பான வரைவுக் குறிப்பை ஆய்வு செய்ய ராஜ்நாத்சிங்க் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ தேவைக்கு கஞ்சாவை சட்டபூர்வமாக்கியிருப்பது நல்ல பலனை அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

கஞ்சாவை புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன