கச்சா எண்ணெய் விலை குறைவு; பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு – நாராயணசாமி குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையிலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒரு பேரல் 58 டாலராக குறைந்த நிலையிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன