கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து

சென்னை செங்குன்றம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, விபத்துக்குள்ளானது.

திருவொற்றியூரில் இருந்து கும்மிடிபூண்டிக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பேருந்தை முந்த முயன்ற போது சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் மற்றும் டயரில் தீ பிடித்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக சென்னை கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன