ஓ.என்.ஜி.சி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கில் ஜெயராமனுக்கு ஜாமின் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஓஎன்ஜிசி (ONGC) நிறுவன சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தங்களது சொத்துக்களை சேதப்படுத்தியதாக பேராசிரியர் ஜெயராமன் மீது ஓஎன்ஜிசி நிறுவனம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து, ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயராமன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயராமனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆனால், கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் காரணமாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஓ.என்.ஜி.சி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் ஜாமின் பெற்றாலும், ஜெயராமனால் சிறையிலிருந்து வெளிவர முடியாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன