ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக அங்கு 58-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்றக் கோரியும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!