ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் 70 சவரண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டை அடுத்த வில்லியம்பாக்கம் ரயில்வே தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அவர் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். தரைதளத்தில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள், 70 சவரண் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளை சம்பவம் குறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன