ஓமலூர் அருகே போலி மருத்துவர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த போலி மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புகார் எழுந்தது.

இதை அடுத்து தாரமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

பாரக்கல்லூர் சாலையில் உள்ள கிளினிக்கை ஆய்வு செய்த போது, அதன் மருத்துவரான மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராணாஜித் பிஸ்வாஸ் என்பவர் 12ஆம் வகுப்பு மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபர் ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன