ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை வீடியோ பதிவுசெய்யப்படுகிறது

டெல்லியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை, வீடியோ ஆதாரமாக பதிவு செய்யப்படவுள்ளது.

முறையாக பயிற்சி பெறாத ஓட்டுநர்களை ஆரம்பகட்டத்திலேயே வடிகட்டும் வகையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகள் சமரசமின்றி பின்பற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஓட்டுநர் உரிமம் பெற நடத்தும் சோதனையை ஏன் வீடியோவாகப் பதிவு செய்யக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதையும், வெளிப்படைத்தன்மையோடு சோதனை நடப்பதையும் உறுதி செய்யும் என அவர் அறிவுறுத்தியிருந்தார். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆம்ஆத்மி அரசு அளித்த பதில் மனுவில் நீதிபதியின் ஆலோசனையை ஏற்பதாக சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த நடைமுறை விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!