ஓட்டுநரைத் தாக்கி விட்டு கண்டெய்னர் லாரி கடத்தல்

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே லாரி ஓட்டுனரை அடித்து கட்டிப்போட்டு விட்டு, டயர் லோடுடன், கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தியான்சிங் என்பவர் கேரளாவில் இருந்து குஜராத்துக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரி டயர்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு தொப்பூர் கணவாய் வழியாக வந்துள்ளார்.

அப்போது 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல், தியான் சிங் ஓட்டி வந்த லாரியை மடக்கி அதில் ஏறி உள்ளது. பின்னர் தியான் சிங்கை அடித்து உதைத்த அந்த கும்பல், கை-கால்களை கட்டிப் போட்டு சாலையோரம் வீசிச் சென்றது.

படுகாயங்களுடன் சாலை ஓரம் கிடந்த தியான் சிங்கை, அவ்வழியாக வந்த மற்ற ஓட்டுநர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன