Advertisement

ஓசூரில் மாவட்ட ஆட்சியர் வீடு வீடாகச் சென்று ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் இருப்பதாகக் கூறி ஒரு வீட்டின் குடிநீர் விநியோகத்தை துண்டித்ததுடன், 3 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஓசூர் ஜுஜுவாடியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் சார் ஆட்சியர் சந்திரகலா மற்றும் அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகக் கூறி உணவகம், மெக்கானிக் கடை உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் ஜுஜுவாடி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர் தேக்கியதாக கூறி ஒரு வீட்டிற்கு குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன