Advertisement
Advertisement

ஒரகடம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, 30 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை, ஆந்திராவின் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரகடம் அருகே பண்ருட்டி – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 2 குடோன்களில் இருந்து செம்மரக்கட்டைகள் லாரி மூலம் கடத்தப்படுவதாக செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 4 கார்களில் சென்ற ஆந்திர போலீசார் 15 பேர், பண்ருட்டி அருகே லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அப்போது துணிக்கழிவுகளுக்கு இடையில் 15 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர் லாரியில் இருந்த 3 பேரை, செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன்களுக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த குடோன்களில் சோதனையிட்ட போலீசார், துணிக்கழிவுகளுக்கு இடையில் மேலும் 10 டன் செம்மரக்கட்டைகள் இருந்ததைக் கண்டு அவற்றையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 25 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 30 கோடி ரூபாய் என அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து செம்மரக்கட்டைகள் எங்கிருந்து, யாருக்காக கடத்தப்பட்டது, குடோன் உரிமையாளர் யார், கடத்தலில் தொடர்புடையவர்கள் யார், இதற்கு முன்பு யாருக்கெல்லாம் விற்பனை நடந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குடோன்களின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன