Advertisement

ஒபாமாகேர் திட்டத்தை நீக்கும் மசோதாவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஒபாமாகேர் என்ற திட்டத்தை நீக்கும் மசோதாவில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயரிய சிகிச்சை அளிக்கும் திட்டமான ஒபாமாகேர் மூலம் நாட்டின் பணம் வீணடிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். உடல்நலம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான சுகாதார ரீதியிலான போட்டிகளை அதிகரிப்பதன் மூலம் ஒபாமாகேர் திட்டத்தில் இணைந்திருக்கும் உடல் நலமிக்க இளைஞர்களை வெளியேற்றவும் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி ஒபாமாகேர் திட்டத்தை நீக்கும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன