ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காவிரி

தொடர்விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

கடந்த சில மாதங்களாக பிலிகுண்டு வழியாக, ஒகேனக்கலுக்கு வரும் காவிரி ஆற்றில் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

தொடர் விடுமுறையொட்டி தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஒகேனக்கலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அருவியில் உற்சாக குளியல் போட்டதோடு, பரிசலிலும் குடும்பத்தினருடன் சவாரி செய்து மகிழந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன