ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் நேற்று இரவு பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது.

18 புள்ளி 5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கரண் சர்மா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மிகக் குறைந்த வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் எடுக்கத் தவறினர். ரோஹித் சர்மாவும், க்ருணால் பாண்டியாவும் விரைந்து ரன்களைச் சேர்த்தனர்.

மும்பை அணி 14 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் புனே மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

414 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன