ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு – இவாங்கா ட்ரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் ((Ivanka)) இவாங்கா நவம்பரில் இந்தியா வருகிறார். உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, வரும் நவம்பர் 28 முதல் 30 வரை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவிற்கு, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க வேண்டும் என அமெரிக்கா சென்றிருந்தபோது மோடி கேட்டுக் கொண்டார்.

இவாங்கா பங்கேற்பதை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார். இந்தியாவில் தொழில்முனைவோருக்கான அமெரிக்க குழுவிற்கு தாம் தலைமை வகிப்பதை கெளரவமாக நினைப்பதாக இவாங்கா டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். இதன் மூலம் ஐதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இவாங்கா டிரம்ப் வரவிருப்பது உறுதியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன