ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் நீக்கம்

ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவ் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார்.

அம்மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் அமைக்கப்பட்டிருந்த கூட்டணியை முறித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியமைத்தார். இதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ், அண்மையில் குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் அகமது படேலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அவரது போக்கு நிதிஷ்குமாருக்கும், கட்சிக்கும் அதிருப்தி அளித்து வந்த நிலையில், சரத் யாதவ் வகித்து வந்த மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில தலைவர் வசிஷ்டநாத் நாராயண் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன