ஐஎஸ் பிடியில் இருந்து சிரியாவின் முக்கிய நகரை விடுவித்தது ராணுவம்

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரம் விடுவிக்கப்பட்டதாக சிரிய ராணுவம் அறிவித்துள்ளது.

சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள சுக்னே நகரத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து பல்வேறு பகுதிகளை சிரிய ராணுவம் மீட்ட நிலையில், சுக்னே நகரம் அவர்களது பிடியிலேயே தொடர்ந்து இருந்து வந்தது. சிரிய ராணுவத்தின் கடுமையான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், ஐஎஸ் பயங்கரவாத படையினர் அங்கிருந்து வெளியேறி டீர் அல்-ஜோர் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன