ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெ., விமானங்கள் தாக்குதலில் முக்கியத் தலைவன் பலி

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அமெரிக்க போர் விமானங்கள் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதாக விமானப்படை அதிகாரி ஜான் நிக்கல்சன் ((John Nicholson)) தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் கோரசான் ((Khorasan)) பகுதி தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் என்பவன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 3 முக்கிய தலைவர்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!