ஏவுகணை சோதனை முழு வீச்சில் நடத்தப்படும்- அமெ., பொருளாதார தடைக்கு ஈரான் பதிலடி

ஏவுகணை சோதனை மேலும் முழுவீச்சில் நடத்தப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான், ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு புதிய பொருளாதாரத் தடை விதிப்பதற்கான மசோதாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த அறிவிப்பு வெளியான பின்னர், உடனடியாக ஈரான் நாடாளுமன்றம் கூடி அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்தது.

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடை தங்கள் நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சி என அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் தங்கள் நாட்டின் ஏவுகணை சோதனை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் மேலும் முழுவீச்சில் நடத்தப்படும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ((Bahram Ghasemi)) பஹ்ரம் காசெமி தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனை என்பது உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் மற்றவர்கள் தலையிடவோ கருத்துகூறவோ உரிமை இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன