ஏவுகணைத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஈரான் நாடாளுமன்றம் முதல்கட்ட ஒப்புதல்

ஏவுகணைத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு ஈரான் நாடாளுமன்றம் முதல்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. ஏவுகணை தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைத் திட்டங்களுக்கும், புரட்சிகரப் படைக்கும் கூடுதல் நிதி ஒதுக்க ஈரான் நாடாளுமன்றம் முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. இதற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படும்போது, ஏவுகணைத் திட்டத்திற்கு ஈரான் அரசு 260 மில்லியன் டாலர் தொகையை ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன