ஏழு வயது குழந்தை கொல்லப்பட்ட வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

ஹரியானாவின் குர்கானில் ஏழு வயது குழந்தை கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் கட்டார், பள்ளி நிர்வாகத்தை 3 மாதங்களுக்கு அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட சிறுவன் பிரதியுமானின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய முதல் அமைச்சர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். கொலையாளியான அசோக் என்ற பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குர்கான் போலீசார் இந்த வழக்கை சிறப்பாக கையாண்டதாகவும் கட்டார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *