ஏழுமலையான் கோவிலில் அன்னதான திட்டத்திற்கு சிக்கல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்திற்கான முதலீட்டுத் தொகையின் வட்டி குறைந்ததால், அந்த திட்டத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்னதான திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

அன்னதானம் வழங்கும் கோவில் அறக்கட்டளைக்கு இதுவரை 850 கோடி ரூபாய் வரை நன்கொடை பெறப்பட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூதலீட்டின் மூலம் 12 சதவீதம் வட்டி வங்கிகளில் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் முதலீட்டிற்கான வட்டி விகிதம் 6.5ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்ன தானப்பிரசாத திட்டத்திற்கு நிதிப்பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவஸ்தானமே பொது நிதியில் இருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!