ஏர் பெர்லின் நிறுவன விமானங்களை வாங்கும் லுஃப்தான்சா

ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா ஏர்பெர்லினின் விமானங்கள் மற்றும் பணியாளர்களை விலைக்கு வாங்குகிறது.

ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா வாங்குகிறது. இதேபோல் ஏர் பெர்லின் நிறுவனத்தில் பணியாற்றும் 8 ஆயிரத்து 500 பணியாளர்களில் 3 ஆயிரம் பணியாளகளையும் லுஃப்தான்சா நிறுவனம் அப்படியே தமது நிறுவனத்துக்கு பணிக்கு எடுத்துக் கொள்கிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளதாக லுஃப்தான்சா தலைமைச் செயலதிகாரி கார்ஸ்டென் ஸ்போர் (Carsten Spohr) அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன