ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சித்தானங்கூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல், சசிக்குமார் என்ற அவர்கள், விடுமுறை தினம் என்பதால், நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றனர். விளையாடிக்கொண்டே குளித்தபோது, டேனியலும், சசிக்குமாரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினர்.

உடனிருந்த சிறுவர்கள் கூச்சலைக் கேட்டு வந்த, அக்கம்பக்கத்தினர் ஏரியில் மூழ்கியவரை மீட்க முயன்றனர். ஆனால், இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன