ஏமனில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஏமனில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏடன் நகருக்கு காரில் வெடிகுண்டுகள் நிரப்பிய படி வந்த தீவிரவாதிகள் இருவர், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் முகாம் அருகே காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதில் தீவிரவாதிகள், அப்பாவி பொதுமக்கள் என 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வீரர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலின் போது ஒரு கட்டிடம் முழுவதும் சிதைந்ததுடன், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாகின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன