Advertisement

எஸ்.பி வேலுமணி திருவிளையாடல்களால் அடிப்படை பணிகள் பாதிப்பு – மு.க ஸ்டாலின்

உள்ளாட்சிப் பணிகளுக்கு மத்திய நிதியாணையம் வழங்கும் நிதியை செலவிடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறுக்கீடு இருப்பதால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளர். அவர் வெளியிட்ட அறிக்கையில், 2017-2018 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியத்தில் முதல் தவணையாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கு 448 கோடியே எழுபது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொகையை நிலுவையில் உள்ள மின்கட்டணம், குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கான்டிராக்ட் பணிகளுக்கு இந்த நிதியை பயன்படுத்த நெருக்கடி கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய பங்கிருக்கும் நிலையில, கமிஷன்களுக்காக அடிப்படை மானியம் செலவிடப்படுவதை அரசு செயலாளர்கள் தடுக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன