எல்.இ.டி. தெருவிளக்கு கொள்முதலுக்கான ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

எல்.இ.டி. தெருவிளக்கு கொள்முதலுக்கான தமிழக அரசின் ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் மின்சிக்கனத்துக்காக எல்.இ.டி. பல்புகள் தெருவிளக்குக்குகளாகப் பொருத்தப்படுகிறது. தமிழகத்தில் எல்.இ.டி. பல்புகளை சென்னை மாநகராட்சி ஆய்வகத்தில் தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனையை எதிர்த்து தியாகராய நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை மாநகராட்சி எலக்ட்ரிக்கல் பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லை என்றும், ஹரியானாவில் உள்ள தேசிய சோதனை மற்றும் அளவீட்டு பரிசோதனை வாரியமே அதற்கான தகுதியான அமைப்பு என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த நிபந்தனைகள் குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு சாதகமாக, உள்நோக்கத்துடன் தமிழக அரசு உருவாக்கியிருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறிய நீதிபதிகள், திட்டப்பணி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த நிபந்தனையை அரசு உருவாக்கியுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன