எல்லைப் பகுதியில் பாக். படைகள் 2-வது நாளாக அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் 2-வது நாளாக அத்துமீறித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதிகளில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்திவரும் பாகிஸ்தான் படைகள் நேற்று பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டி செக்டார் பகுதியில் இந்திய நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடங்கின.

இந்தியத்தரப்பில் பாதுகாப்புப்படை வீரரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கிருஷ்ணாகாட்டி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் படைகளுக்கு இந்தியப் பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன