எம்777-ஏ2 பீரங்கிகள் – சோதனை செய்து பார்க்கிறது இந்திய ராணுவம்

அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட அதி நவீன பீரங்கிகளை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவம் சோதித்து பார்க்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து, எம்777 ஏ2 ((M777 A-2)) ரக அதிநவீன பீரங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த ஆண்டு கையெழுத்திட்டது.

5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் படி, முதல்கட்டமாக, அமெரிக்காவின் பி.ஏ.இ. சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த 2 பீரங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பீரங்கிகளை பொக்ரானில் வைத்து ராணுவம் சோதனை செய்து பார்க்கத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் வரை சோதனை தொடரும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போபர்ஸ் பீரங்கிகள் கொள்முதலில் முறைகேடு நடந்து அம்பலமானதை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு பின்னர் அதிநவீன பீரங்கிகளை இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன