எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மராத்தான் ஓட்டப் போட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மராத்தான் ஓட்டப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 30ம் தேதி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆத்தூரில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆத்தூர் நான்குரோடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன