என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் சுமார் 500 தொழிலாளர்கள் கைது

நெய்வேலி என்.எல்.சி.யில் மாதம் 26 நாட்கள் பணி வழங்கக் கோரி, தர்ணாவில் ஈடுபட்ட சுமார் 500 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

என்.எல்.சி. முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நாட்கள் கடந்த 12ஆம் தேதி முதல் 19 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இன்று காலை முதலாவது சுரங்க விரிவாக்க நுழைவு பாதை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சென்றுவிடாதபடி போலீசார் சுற்றி நின்று கொண்டனர். மேலும் அனுமதியின்றி முற்றுகை போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி தொழிலாளர்களை கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!